
அந்தகார மோகனம் (Tamil Edition)
கதையிலிருந்து…
“லுக் மதி…” என ஆரம்பித்தவனைப் பார்க்கப் பிடிக்காது அவள் முகத்தை திருப்பிக் கொள்ள, “ஓகே தென்… என்னை நீ பார்க்க தேவையில்லை… பட் நான் சொல்ல வந்ததை சொல்லிட்றேன்… சீ… மதி… நான்… க்கும்… ஐ அம் சாரி… நான் உன்கூட நெருங்கி பழகுனதே ம்… மதி… க்கும்… ஐ மீன் நான் உன்கூட நெருங்கிப் பழகுறதுக்கான முழுக் காரணம் மது தான்… அவளை பொஸஸிவ்வா பீல் பண்ண வைக்கணும்கறதுக்காக உன் கூட அப்படி நான் பழக வேண்டியதா போயிடுச்சு… ஐ நோ உனக்கு என் மேல எந்த இன்ட்ரெஸ்ட்டும் இல்ல… பட் இருந்தாலும் நான்… என்ன சொல்றதுனு தெரியல… பை…” அவன் காலடித் தடங்கள் தூரமாகுவதை உணர்ந்துக் கொண்டாலுமே, முகத்தை மறந்தும் இந்தப் பக்கமாக திருப்பினாளில்லை பெண்.