
My life is longing (என் ஜீவன் ஏங்குதே) (Tamil Edition)
நாயகன் தனக்கு திருமணத்தில் விருப்பம் இல்லை என்று பெண் பார்க்கும் படலத்தின் போதே நாயகியிடம் வெளிப்படையாக சொல்லி விடுகிறான், நாயகியோ தன் மாமனாருக்காக நாயகனுக்கு விருப்பம் இல்லை என்று தெரிந்தும் அவனுடன் திருமண பந்தத்தில் இணைகிறாள், தன் வார்த்தையை மீறி அவள் தன்னை திருமணம் செய்து கொண்ட காரணத்தினாலோ என்னவோ, 'ஆறுமாததிற்கு மட்டும் தான் நீ என் மனைவி, அதற்கு பிறகு என்னை விட்டு விலகி போய்விடனும்' என்று முதல் இரவிலேயே நாயகிக்கு விவாகரத்து பத்திரத்தை கொடுத்து அதில் கையெழுத்தும் வாங்குகிறான் நாயகன்.... தன்னை வளர்த்தவர்களுக்கு தன் நிலை தெரிய வர கூடாது என்று 'நடக்கிறது நடக்கட்டும்' என்ற ரீதியில் அப்பொழுதைக்கு கையெழுத்து இட்ட நாயகிக்கு, நாயகன் திகட்ட திகட்ட அன்பை வாரி வழங்குகிறான், அதே சமயம் வார்த்தையால் குத்தி கிளறவும் செய்கிறான், நாயகிக்கு அவன் ஒரு புரியாத புதிராக இருக்கும் பட்சத்தில் அவன் அன்பில் நெகிழ்ந்து அவனை காதலும் கொள்கிறாள், அந்நிலையில் தான்
BEST DEALS
