ENAKKAGA VAA! NAAN UNAKKAGA VAA!! எனக்காக வா! நான் உனக்காக வா!!: (Tamil Edition)
  • Digital List Price: INR 500.00
  • Offer Price: INR 390.00
  • ISBN/ASIN: B0D3RXZ5NK
  • Language: Tamil

ENAKKAGA VAA! NAAN UNAKKAGA VAA!! எனக்காக வா! நான் உனக்காக வா!!: (Tamil Edition)

Srikala

அப்போது வாசலில் கார் ஒன்று வந்து நின்றது. சந்திரவதனி கார் என்றால் சூரியநாராயணனுக்கு அடையாளம் தெரிந்து இருக்கும். பிரதாப் காரை அவனுக்கு அடையாளம் தெரியவில்லை. யாரென்று உற்றுப் பார்த்தான். காரிலிருந்து இறங்கிய சந்திரவதனியை கண்டவன் அப்படியே திகைத்து போய் நின்றிருந்தான். அவளின் பின்னேயே இறங்கிய பிரதாப்பை கூட அவன் கவனிக்கவில்லை.
சூரியநாராயணனின் கரங்களில் இருந்த அகிலை கண்டதும் சந்திரவதனி மகிழ்ச்சியுடன் அவர்களை நோக்கி விரைந்து வந்தாள். காலையில் இருந்து அவளிடம் இருந்த பதட்டம், கவலை, சோர்வு எல்லாம் இந்த நொடி காணாமல் போனது. தேடிய சொர்க்கம் கை வந்து சேர்ந்த நிம்மதி அவளுள்... வேகமாக அவர்களை நெருங்கியவள் சூரியநாராயணனின் நெஞ்சில் முகம் புதைத்திருந்த அகில் அருகே குனிந்து, "அகி குட்டி..." என்றழைக்க...
பெரியம்மாவின் குரல் கேட்டதும் தேம்பி கொண்டிருந்த அகில் வேகமாய் அவளைத் திரும்பி பார்த்தான். அவளைக் கண்டதும் சின்னவனின் இதழ்களில் புன்னகை தோன்றியது. அவன் மனதில் நிம்மதி தோன்றி இருக்க வேண்டும். 'ம்மா' என்றழைத்தவன் அவளை நோக்கி தனது கரத்தினை மட்டும் நீட்டினான். சின்னவனின் செய்கையில் அவனது கரத்தினைப் பற்றியவள் அப்படியே உடைந்து போனாள்.
இருவரது செய்கையைச் சூரியநாராயணன் சிறு புன்னகையுடன் பார்த்திருந்தான். சந்திரவதனியின் வருகையினால் அவனது இயலாமை, கோபம் அனைத்தும் சடுதியில் காணாது போனது. அவனது உதடுகளில் கர்வ புன்னகை வந்தமர்ந்தது. அவன் திமிராய் தனது முறுக்கிய மீசையை மேலும் முறுக்கி கொண்டான். பின்னே அவன் நினைத்தது நடந்து விட்டதே!
"அகி குட்டி..." சந்திரவதனி அதற்கு மேல் தாளமாட்டாது மகனின் முகத்துடன் முகம் வைத்து அழுதாள். இத்தனை நேரம் அவனைக் காணாது தவித்த தனது தவிப்பை அவள் அழுகையில் கரைத்தாள். அவளது கண்ணீரை கண்டு அகிலின் கண்களிலும் கண்ணீர் தேங்கியது. அகில் 'ம்மா' என்றழைத்தபடி அவளது முடியை பிடித்திழுத்து அடித்துக் கடித்துத் தனது தவிப்பை அவளிடம் செய்கையில் கூறியவன்... ஒற்றைக் கையால் அவளது கழுத்தினை வளைத்துக் கொண்டான்.
அந்தக் கணம் சந்திரவதனி ஓய்ந்து போனவளாய் சூரியநாராயணனின் நெஞ்சில் தலை சாய்த்து அகிலை அணைத்துப் பிடித்துக் கொண்டாள். காலையில் இருந்து ஓடி கொண்டிருந்தவளுக்குச் சற்று இளைப்பாறல் தேவைப்பட்டது. சந்திரவதனியின் செய்கையில், அவளது அருகாமையில் சூரியநாராயணன் தான் பனிக்கட்டியாய் உறைந்து போனான். ஒரு பெண்ணின் அருகாமை அவனுக்கும் புதிதே!
எதையும் பணத்தைக் கொண்டே விலை பேசும் பணக்காரர்கள், பாசத்தையும் அப்படியே விலை பேசுவார்கள் என்று நினைத்திருந்த சூரியநாராயணனுக்குச் சந்திரவதனி புதிய பரிமாணத்தைக் காட்டினாள். அகில் மீதான அவளது பாசம் கண்டு அவனின் விழிகளினோரம் நீர் கசிந்தது. கல்லுக்குள்ளும் ஈரம் கசிந்ததுவோ!

BEST DEALS

The Christmas Tree Farm
The Christmas Tree Farm Laurie Gilmore Offer Price: USD 0.99

Happy Bloody Christmas
Happy Bloody Christmas Jo Middleton Offer Price: USD 0.99

A Little Place in Prague
A Little Place in Prague Julie Caplin Offer Price: USD 0.99

The Comfort Food Café
The Comfort Food Café Debbie Johnson Offer Price: USD 0.99

Pride and Prejudice
Pride and Prejudice Jane Austen Offer Price: USD 0.99

A Sure Duke (The McQuoids of Mayfair)
A Sure Duke (The McQuoids of Mayfair) Christi Caldwell Offer Price: USD 2.49

The Tuscan Child
The Tuscan Child Rhys Bowen Offer Price: USD 5.43

Runaway to the Outback (Welcome to Bunya Junction Book 2)
Runaway to the Outback (Welcome to Bunya Junction Book 2) Nicole Flockton Offer Price: USD 3.99

KNOX
KNOX Susan May Warren Offer Price: USD 1.99

Slouch Witch
Slouch Witch Helen Harper Offer Price: USD 1.49

Second Chance Contract
Second Chance Contract M. Robinson Offer Price: USD 2.49

About the Author

Her real name is Mrs. Sasikala Murugesan, she has been writing online since 2011 (almost 11 years) under the pen name Srikala. Hometown Tirunelveli, Tamil Nadu. She has written a total of 61 novels including short stories and long novels. She is the winner of 'Pentopublish 4' short form title by Amazon KDP.


 
Top